சென்னையில் விமான சாகசத்தைப் பார்கக் வந்திருந்த ஒருவர் மயங்கி வீழ்ந்து மரணமடைந்துள்ளார்.
சாகசத்தைப் பார்வையிட வந்திருந்த பொதுமக்கள் பலர் வெப்பம் தாளாமல் மயங்கி வீழந்தனர். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அதில் 56 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
இந்திய விமானப் படை 92 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. இதைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் குவிந்தனர்.சென்னை மெரினாவில் இன்று காலை 11 மணி அளவில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளின் சாகச நிகழ்ச்சிகள் தொடங்கின.
இதை ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நேரில் கண்டுகளித்தனர். மெரினாவில் பொதுமக்கள் இதைக் கண்டுகளிக்க 15க்கும் மேற்பட்ட இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் சுகோய் சு 30, MI 17 VH ஹெலிகஃப்டர்கள், அட்வான்ஸ் லைட் ஹெலிகஃப்டர் (ALH) ரஃபேல், தேஜஸ், ஜாகுவார் உள்ளிட்ட விமானங்களும் பங்கேற்றன. மேலும் முதலாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஹாவர்ட் விமானம், டக்கோடா உள்ளிட்ட பல ரக விமானங்கள் கண்களுக்கு விருந்து படைத்தன.
சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த சாகச நிகழ்ச்சியை நேரில் கண்டு ரசித்தனர். இது லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸிலும் இடம் பெறுகிறது.
ஒரே நேரத்தில் சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் வந்ததால் அந்த இடமே மனித தலைகளாக காட்சி அளித்தது. கடும் வெப்பம் உள்ளிட்டவற்றால் சாகச நிகழ்ச்சிக்கு வந்த 5 க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனா். இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதற்கிடையே சென்னையில் விமானப் படை சாகச நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்ற 56 வயதான நபர் உயிரிழந்துள்ளதுள்ளார்..சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஜான் (வயது 56) என்பவர் தான் மயக்க மடைந்ததாக மருத்துவனைக்கு அழைத்து சென்ற இடத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.