முறைப்பாடுகளை 2நாளில் விசாரிக்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து சிறு முறைப்பாடுகளை 2 நாளில் விசாரிக்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்படும் முறைப்பாடுகளை அன்றைய தினமே விசாரணை ஆரம்பிக்கப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.