பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவை நியத்தமைக்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று (08) கூடியபோதே அது இடம்பெற்றுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் 14 நாட்களுக்கு மேல் பதவியில் இருந்தால் அரசியலமைப்பு சபையின் அனுமதி பெறப்பட வேண்டும்.
அந்த வகையில் ஜனாதிபதி அநுரகுமார நியமித்த பதில் பொலிஸ் மாஅதிபரை அரசியலமைப்புப் பேரவை அங்கீகரித்துள்ளது.