யானறிந்த கவிஞர் ஆங்கரை பைரவி!
அது என்ன ஆங்கரை?
அச்சிற்றூரைப் பற்றி யோசித்தேன்
பளிச்சிட்டது எனக்குள் ஒரு பதில்
ஆணலை பெண்ணலை போன்று
ஆண்+கரை = ஆங்கரை என்றும்
அதற்குத் துணையாக அமைந்த பெண் பெயர்தான் “பைரவி.”
அர்த்தநாரியாகிய அந்தச் சிவனும் பார்வதியும் ஒன்றாகி அமைந்ததால் “ஆங்கரை பைரவி” எனும் அதியற்புத அதிர்வலைகளைக் கொண்ட திருநாமம் இக் கதாநாயகனுக்கு இயல்பாய் அமைந்து விட்டது. யானறிந்த கவிஞர் ஆங்கரை பைரவி பற்றி இப்போது புரிந்திருக்கும்.
பிட்டுக்கு மண் சுமந்தவர் இறைவனார் சிவன் தமிழ்கூறு நல்லுலகில் தன் பெயர் நன்முறையில் நிலைக்கப் பாடுபட்டவர் (நாளும் பாடுபடுபவர்) நம்ம “ஆங்கரை பைரவி” அவர்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவரெழுதி வாசித்துக் கடக்க முடியாமல் என்னை மூர்ச்சையாகிக் கீழே விழச் செய்தது இவரின் “பின்னிருக்கையில் ஒரு போதிமரம்.” எனும் தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பு நூல்.
இப்பொழுதுக் “காஞ்சுருட்டான்” எனும் தலைப்பிலான கவிதைத் தொகுப்பு நூலினை இன்று (17) திருச்சியில் நன்முறையில் வெளியிட்டிருக்கின்றார்.
இக் கவிதைத்தொகுப்பு நூல் தமிழ்கூறு நல்லுலக இலக்கிய ஆர்வலர்களின் நல்வரவேற்பையும் நன்மதிப்பையும் பெறும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்..!
“வாழிய நற்றமிழ்; வளர்க எங்கள் “ஆங்கரை பைரவி“யின் சீரிளமைப்புகழ்!”
என்றென்றும் வற்றாப்பேரன்புடன்: –கவிச்சாரல் கொள்ளிடம் காமராஜ்,
திருச்சிராப்பள்ளி – 621 216.
நூல் வெளியீட்டுக் காணொலி:-
மலைக்குருவி