இந்திய கடற்படைக் கப்பல் இலங்கைக்கு: இந்திய கடற்படைக்குச் சொந்தமான “INS Kalpeni” என்ற கப்பல் நேற்று (19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முதன்மையாக விளங்கும் இந்திய கடற்படைக் கப்பல் இலங்கைக்கு வருகை தந்துள்ளது. அதன் சேவை 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த கப்பலானது பல்வேறு தொழில்நுட்ப கருவிகளைக் நாட்டுக்கு கொண்டுவந்துள்ளதுடன், இந்த பொருட்கள் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.