இந்தியாவில் விரைவில் பறக்கும் டாக்ஸி!

இந்தியாவில் விரைவில் பறக்கும் டாக்ஸி

இந்தியாவில் விரைவில் பறக்கும் டாக்ஸி அறிமுகமாவுள்ளது. பெங்களூரு விமான நிலையத்திலிருந்து இந்த மின்சார பறக்கும் டாக்ஸி அறுமுகமாகவுள்ளதாக புதியதலைமுறை செய்தி வெளியிட்டுள்து.

பெங்களுரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கு வாகனத்தில் தரைமார்க்கமாக பயணித்தால் 3 மணி நேரமாகுமாம். இனி இந்த சிரமம் இருக்காது, 19 நிமிடத்தில் சென்றுவிடலாம் என்கிறது பெருநகர நிர்வாகம்.

1,700 ரூபாய் கட்டணம்… 19 நிமிட பயணம்… சர்வதேச விமான நிலையம் முதல் எலக்ட்ரானிக் சிட்டி வரை மின்சார பறக்கும் டாக்ஸி திட்டத்தை கொண்டு வரப்போகிறது பெருநகர நிர்வாகம். இது முதற்கட்டம் என்றும், இதனால் மூன்று மணி நேரப் பயணம் வெறும் 19 நிமிடங்களாக குறையும் எனவும் கூறுகின்றனர். இந்தச் சேவையை வழங்க, தனியார் நிறுவனம் தடையில்லாச் சான்று அனுமதிக்காக விண்ணப்பித்து காத்துக் கொண்டிருக்கிறது.

மேலும், இந்த திட்டம் மூன்று ஆண்டுகளில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகறது. இந்த திட்டத்தின் மூலம் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு பெருமளவு குறையும். நெரிசல் மிகுந்த பயணம் தவிர்க்கப்படும். இதற்காக சர்லா ஏவியேஷன் என்ற தனியார் நிறுவனம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துடன் (BIAL) ஒப்பந்தம் செய்துள்ளது

போக்குவரத்து நெரிசலில் சிக்கி நேரத்தை செலவிடும் மக்களின் நலன் கருதி மின்சார செங்குத்து டேக்- ஆஃப் மற்றும் லேண்டிங் (eVTOL) பறக்கும் டாக்ஸிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ஏழு இருக்கைகள் கொண்ட மின்சார பறக்கும் டாக்சிகள் பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, இந்த சேவையை பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி இடையே உள்ள 52 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயண வழி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் விரைவில் பறக்கும் டாக்ஸி பெங்களூரு மாநகர் மட்டுமில்லாமல், மும்பை, டெல்லி, புனே ஆகிய நகரங்களுக்கும் இந்தச் சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள சர்லா ஏவியேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அட்ரின், கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துதல், மக்களின் போக்குவரத்தை எளிதாக்குதல் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் :ஜெகன்நாத்


வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி!

Related posts