கம்மன்பிலவின் அறிக்கையை அரசு நிராகரிப்பு

கம்மன்பிலவின் அறிக்கையை அரசு நிராகரிப்பு

கம்மன்பிலவின் அறிக்கையை அரசு நிராகரிப்பு: பிவித்துரு கெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தொடர்பான விசாரணை அறிககையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ. என். ஜே. டி. அல்விஸ் தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கையை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கையில் முற்று முழுதாக முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ரவி ஜயவர்தன, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகக் கடமையாற்றி ஷானி அபேசேகர ஆகியோரை இலக்குவைத்துத் தயாரிக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த இருவரும் தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுபெற்ற பொலிஸ் பேரவையில் இணைந்துகொண்டதன் பின்னரே விசாரணைக் குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சர் விஜித்த ஹேரத் கூறினார்.

கம்மன்பிலவின் அறிக்கையை அரசு நிராகரிப்பு செய்வதற்கான காரணத்தை விளக்கிய அமைச்சர், 2024 ஜூன் மாதம் ஒன்பதாம் திகதி இந்தப் பொலிஸ் பேரவை உருவாக்கப்பட்டதாகவும் அதற்குப் பின்னர் மூன்று நாள் கழித்து விசாரணைக் குழு நியமிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். மூன்று மாத காலத்தில் அவதாவது கடந்த செப்டம்பர் 15 ஆம் திகதி அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும் என்றும் அமைச்சுசர் சுட்டிக்காட்டி னார்.

உயிர்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை பற்றிக் கம்மன்பில பல சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வந்தார். காணாமற்போனதாகக் கூறப்பட்ட பக்கங்கள் தம்மிடம் இருப்பதாக முன்பு தெரிவித்திருந்தார். பின்னர் அதுபற்றி அரசாங்கம் கருத்து வெளியிடுகையில், உடனடியாக அந்தப் பக்கங்களை ஒப்படைக்குமாறு அறிவித்திருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்கூல் சம்பவம் பற்றிப் புதிதாக விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் விஜித்த ம் மேலும் தெரிவித்தார்.

பொருளாதாரத்தை என்னால்தான் மீட்க முடியும்!

Related posts