நியாயமான விலையில் அரிசி விற்பனை

அடுத்தாண்டு மாகாண சபைத் தேர்தல்

நியாயமான விலையில் அரிசி விற்பனை செய்ய அனைத்துத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் அரிசிக்கான நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அரிசி வியாபாரிகள், விவசாயத் திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

நியாயமான விலையில் அரிசி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதன் பின்னர் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் அரிசி விலையை மாற்றுவது நியாயமல்ல எனவும் அரிசி வியாபாரிகளிடம் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

விவசாயிகளிடம் இருந்து அரிசியை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்குவதற்கும் முறையான பொறிமுறை அவசியம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே அரிசியை சேகரித்து வைப்பவர்களை பதிவு செய்யுமாறு விவசாய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை என்னால்தான் மீட்க முடியும்!

Related posts