நாட்டில் விசேட பொலிஸ் பாதுகாப்பு: வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் இலங்கை மக்களையும் பாதுகாக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டிலில் விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு,கிழக்கு ஐரோப்பாவின் இராணுவ நிலைமையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்புவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறுகம்பே சுற்றுலாப் பகுதிக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாமென எச்சரிக்கை செய்திருக்கின்றது. இதனையடுத்து நாட்டில் விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகப் பொலிஸும் விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தில் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் மூலம் அவதானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கை மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் மரியாதையையும் வலுப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பிராந்தியமான இந்த நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, அவர்கள் எதிர்பார்க்கும் மகிழ்ச்சி, அறிவு பெறுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றுக்குத் தேவையான சூழலை உருவாக்குவது நம் அனைவரின் பொறுப்பாகும்.
இதன்படி, மத்திய கிழக்கு, கிழக்கு ஐரோப்பா ஆகியவற்றின் இராணுவ நிலைமையைக் கருத்திற்கொண்டு, பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின் பேரிலும் ஒருங்கிணைப்பின் பேரிலும் இலங்கை பொலிசாரும் புலனாய்வு அமைப்புகளும் இணைந்து விசேட வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து நடைமுறைப்படுத்தவுள்ளன.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக நாட்டில் விசேட பொலிஸ் பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு. நடவடிக்கை எடுத்துள்ளது.
பொலிஸ் சுற்றுலாப் பிரிவு மேலும் பலப்படுத்தப்பட்டு அமுல்படுத்தப்படுவதுடன் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய சகல பொலிஸ் நிலையங்களுக்கும் இது தொடர்பான விசேட அறிவுறுத்தல்களை வழங்குவார். பூர்வாங்க நடவடிக்கையாக, எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் இன்று முதல் பாதுகாப்பு தொடர்பான ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் 1997 இலங்கை காவல்துறையின் குறுகிய தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது.
சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள், அவர்களின் ஊழியர்கள், அவர்களின் சொந்தத் துறையில் உள்ள அனைவரது பங்களிப்பும் மிகவும் பாராட்டப்பட வேண்டியதாகும். எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்க காவல்துறையினர் தங்கள் வரம்பிற்குள் சிறந்த நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அவர்கள் தங்கள் அதிகார வரம்பில் உள்ள காவல் நிலையங்களுடன் ஒருங்கிணைக்க முடியும்.எதிர்காலத்தில், காவல் நிலையங்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.
இவ்வாறு பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.