எல்பிட்டி பிரதேசசபை ஜேவிபி வசமானது!: காலி மாவட்டத்தின் எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியீட்டியுள்ளது.
நேற்று (26) நடைபெற்ற எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் நேற்று இரவு வெளியாகின. அதன்படி,
எல்பிட்டி பிரதேசசபை ஜேவிபி வசமானது! விபரம் வருமாறு:-
தேசிய மக்கள் சக்தி – 17,295 வாக்குகள் – உறுப்பினர்கள் 15
ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகள் – உறுப்பினர்கள் 06
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 3,957 வாக்குகள் – உறுப்பினர்கள் 03
பொதுஜன எக்சத் பெரமுன – 2,612 வாக்குகள் – உறுப்பினர்கள் 02
சுயேச்சைக்குழு 1 – 2,568 வாக்குகள் – உறுப்பினர்கள் 02
பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி – 1,350 வாக்குகள் – உறுப்பினர்கள் 01
தேசிய மக்கள் கட்சி – 521 வாக்குகள் – உறுப்பினர்கள் 01
தெவன பரபுர கட்சி – வாக்குகள் 388 – உறுப்பினர்கள் 00
ஜனசெத பெரமுன – வாக்குகள் 50 – உறுப்பினர்கள் 00
29 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளும் 1 சுயேச்சைக் குழுவும் நேற்றைய தேர்தலில் போட்டியிட்டன.
எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேற்றுக் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.
வாக்களிப்பு 48 நிலையங்களில் இடம்பெற்றதுடன், இம்முறை எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் 55,643 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
மலைக்குருவி