ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே அணி

ஒற்றறையாட்சியை நிராகரிக்கும் ஒரே கட்சி

ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே அணி: தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாத்திரமே ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே கட்சி என்று அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை 4.30 அளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே அணி தமது கட்சி மாத்திரமே என்றும் இதுபற்றி வேறு எந்த ஒரு கட்சியும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடக்கின்றன. இந்தப் 15 வருடங்களில் எமது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் நாளாந்தம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்களின் ஒரு போராட்டத்திலாவது ஜே.வி.பி கலந்து கொண்டுள்ளதா?.வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

தனியார் காணிகள் அபகரிப்பு எதிராக பாதிக்கப்பட்ட எமது மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இவற்றில் ஏதாவது ஒன்றிலாவது இந்த ஜே.வி.பி தரப்பினர் அல்லது தேசிய மக்கள் சக்தி என கூறப் படுகிறவர்கள் கலந்து கொண்டுள்ளார்களா?இல்லை. இடைக்கால அறிக்கையைப் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் நிறைவேற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.

இலங்கையின் பிரதான அமைப்பாக அரசியல் அமைப்பு காணப்படுகிறது.அந்த அரசியல் அமைப்பை மூன்று தடவை கொண்டு வந்து நிறைவேற்றப்படுள்ளது. மூன்று அரசியல் அமைப்பையும் எமது மக்கள் நிராகரித்தனர்.

நாட்டின் பிரதான சட்டத்தை இரண்டாவது இனம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது என்றால் அதற்கான அர்த்தம் அந்த இனத்திற்கு ஓர் இனப் பிரச்சினை உள்ளது என்பதேயாகும்.

சர்வதேச சமூகம் 2012 ஆம் ஆண்டில் இருந்து ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப் படுகின்ற ஒவ்வொரு தீர்மானத்தையும் தெளிவாக வலியுறுத்துகின்றது இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்று.

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் அரசியலமைப்பை நிறைவேற்ற வேண்டும்.அப்படி கூறுகின்ற படியால் போருக்குப் பின்னர் ஒரு தீர்வு காண்பதற்கான நாடகமாவது இங்கு நடிக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது.

ஒரு தீர்வில்லாத யோசனை கொண்டு வந்தால் அதை தமிழ் மக்கள் நிராகரிப்பார்கள். நிராகரித்தால் இனப்பிரச்சினை தொடர்ந்து இருக்கும், அப்படி தொடர்வதாக இருந்தால் சர்வதேச மட்டத்தில் தமக்குத் தேவையற்ற அழுத்தங்கள் வரும் என்கிற ஒரு பிடியாவது நாங்கள் இன்று வைத்துள்ளோம்.

அந்தப் பிடியை இல்லாமல் செய்வதற்கு தான் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு கொண்டு வரப்பட்டு, வடக்கு கிழக்கில் சரித்திரத்தில் முதல் தடவையாக எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களுடைய பெரும்பான்மை ஆதரவோடு, அதை நிறைவேற்றி உலகத்திற்கே தமிழ் மக்கள் இந்த அரசியல் அமைப்பை ஆதரித்து விட்டார்கள் என்ற ஒரு செய்தியைச் சொல்வதற்கு முயல்கின்றார்கள்.

இதுதான் எமக்கு இருக்கின்ற ஒரு மிகப்பெரிய சவால்.ஒற்றையாட்சி அரசியலமைப்பை நாங்கள் நிராகரிப்பதாக இருந்தால் அதனை நிராகரிக்கக்கூடிய, செயல்படுத்தக்கூடிய ஓர் அணியாக இந்தத் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளது.

சைக்கிள் சின்னம் இந்தத் தேர்தலில் வடக்கு கிழக்கில் குறைந்தது 10 உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். வன்னியில் நாங்கள் இரண்டு உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்தாண்டு மாகாண சபைத் தேர்தல்

Related posts