பொதுத்தேர்தல் தபால்மூல வாக்களிப்பு: பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகிறது.
மாவட்ட செயலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் பரிசோதகர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இன்று தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தபால்மூல வாக்களிப்பு இன்று முதல் எதிர்வரும் நவம்பர் நான்காம் திகதிவரை நடைபெறும்.
முப்படை முகாம்கள், அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளை நவம்பர் மாதம் முதலாம் திகதியும் 4ஆம் திகதியும் அளிக்க முடியும்.
உரிய நாள்களில் தபால் வாக்களிக்க முடியாத வாக்காளர்கள், தாங்கள் பணிபுரியும் மாவட்டத்திலுள்ள மாவட்ட தேர்தல்அலுவலகங்களில் வாக்களிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பொதுத்தேர்தல் தபால்மூல வாக்களிப்பு இன்று நடைபெறும்போது நிறுவன அடையாள அட்டையைப் பயன்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.