பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெருவெற்றி!: நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 159 உறுப்பினர்களைப் பெற்று பெருவெற்றியடைந்துள்ளது.
மக்களின் 68 இலட்சத்து 63186 வாக்குகள் மூலம் 141 உறுப்பினர்களையும் தேசியப் பட்டியல் மூலம் 18 உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. இதில் 12 பேர் பெண்களாவர். அதில் தமிழர்கள் மூவரும் அடங்குகின்றனர்.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 19 இலட்சத்து 68716 வாக்குகளைப் பெற்று 35 உறுப்பினர்களையும் தேசியப் பட்டியல் ஊடாக ஐந்து உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன தலா மூன்று உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி எட்டு உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெருவெற்றி அடைந்திருக்கும் சூழலில் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் படுதோல்வியடைந்துள்ளனர்.
கொழும்புவில் தொலைபேசிச் சின்னத்தில் ஐககிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட மனோ கணேசன், அவருக்கு ஆதரவாகப் போட்டியிட்ட ஊடகவியலாளர் ஆகியோர் படுதோல்வியடைந்துள்ளனர். மனோ கணேசனைத் தேசியப் பட்டியலில் உள்வாங்க சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், தோல்வியடைந்தவர்களுக்குத் தேசியப்பட்டியலில் வாய்ப்பு வழங்குவதற்குக் கட்சியில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவதாக உள்ளகத் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.
வடக்கில் மக்களின் சுதந்திரம் நிலைநாட்டப்படும்