டெஸ்ட் கிரிக்கெட்டில் 2500 ஓட்டங்கள்: டோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட் இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 2-வது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர். இதையடுத்து, 366 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை இந்தியா தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்திருந்தது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.…
Read More