ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்: ஈரானின் இராணுவத் தளங்களை இலக்குவைத்து இஸ்ரேல் இன்று நடத்திய விமானத் தாக்குதலுக்குப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேநேரம், அமெரிக்காவும் பிரித்தானியாவும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை நியாயப்படுத்தியுள்ளன. தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என்று அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் சுமார் 20 இராணுவத் தளங்கள் இலக்கானதாகவும் இருவர் கொல்லப்பட்டதாகவும் ஈரானிய பாதுகாப்புப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. எனினும், இஸ்ரேலின் தாக்குதலை முறியடித்துவிட்டதாகவும் ஈரான் படையினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலையடுத்து ஈரான் வான்பரப்பின் பாதுகாப்பு முறைமை செயற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஈரான், ஈராக் விமான சேவைகள் அனைத்தும் இரத்துச்செய்யப்பட்டன. ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து ஓமான், ஈராக், பாகிஸ்தான், மலேசியா, சவூதி ஆரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. இஸ்ரேலின் ஆத்திரமூட்டும்…

Read More