பங்களாதேஷ் ஜனாதிபதி விலகக்கோரி போராட்டம்: பங்களாதேஷில் மீண்டும் மாணவர் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி பதவி விலகக் கோரி இன்று நடந்த இந்தப் போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட மாணவர்கள் முயற்சித்தனர். எனினும் அந்த முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர். பங்களாதேஷ் அரசு கொண்டு வந்த வேலை ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் தொடங்கிய மாணவர் போராட்டம், அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பதவியை இழந்ததுடன் முடிவுக்கு வந்தது. போராட்டக்காரர்கள் பிரதமரின் இல்லத்தை முற்றுகையிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறிய ஹசீனா, அன்றிலிருந்து இந்தியாவிலேயே தங்கியுள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் பாராளுமன்றத்தைக் கூட முற்றுகையிட்ட மாணவர் போராட்டக்காரர்கள் நாட்டில் புதிய ஆட்சியை கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர். மாணவர் தலைவர்களின் பங்களிப்புடன் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசும் நியமிக்கப்பட்டது. அதன் பின்னர், நாட்டில்…
Read More